ilayaraja kamalhasan
ilayaraja kamalhasan

இவரா இளையராஜா?… எனக்கு தெரியவே தெரியாது… உல்டா அடித்த உலகநாயகன்!…

தனது இசை வாழ்க்கையை படமாக எடுக்கும் அளவிற்கு சாதனைகளை குவித்துள்ளவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் நடிக்க வந்த கதாநாயகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரது இசைக்காகவே பல நாட்கள்  ஓடிய படங்களும் உண்டு. தோல்வியடைய வேண்டிய படங்களை கூட தூக்கி நிறுத்திய பெருமை இவரையே சேரும்.
இவர் இசையமைப்பில் நடித்ததாலே பிரபலமானவர்கள் பலரும் உண்டு.

ரஜினி, கமல் என இருவருக்கும் மாறி, மாறி இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. என்னை விட அவருக்கே நல்ல, நல்ல பாடல்களை கொடுத்துள்ளீர்கள் என மாறி, மாறி இருவரும் உரிமையோடு கோபித்துக்கொள்ளும் அளவிற்கு அவர்ளோடு நட்பு பாராட்டியும் வந்தவர்  இவர்.

ilayaraja kamal
ilayaraja kamal

இளையராஜா சினிமாவில் அறிமுகமான காலத்தில் மிகுந்த அமைதியோடே தான் காணப்படுவாராம். இளையராஜவின் சகோதரரான கங்கை அமரனையே முதலில் இளையராஜா என நினைத்துக்கொண்டிருந்தாராம் கமல்ஹாசன்.

இளையராஜாவின் அறிமுக படமான “அன்னக்கிளி” மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்கு அடுத்த படியாக கமல் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம் இளையராஜா. இதனிடையே “அன்னக்கிளி” படத்தின் வெற்றியை கொண்டாட விழா நடத்தப்பட்டது.

விழாவின் போது மேடையில் பெயர் சொல்லி அழைக்கப்பட்டாராம் இளையராஜா. அப்பொழுதுதான் கமலுக்கு பிடிபட்டதாம் தான் இவ்வளவு நாளும் கங்கை அமரனை அல்லவா இளையராஜா என நினைத்துக் கொண்டிருந்தோம் என.

சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த மலையாள திரைப்படம் “மஞ்சு மெல் பாய்ஸ்” வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது “குணா” திரைப்படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் தான். கமல் ஹீரோவான இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது