பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் இயக்குனராகி, கதாநாயகன் ஆனவர் பாண்டியராஜன். கதாநாயகனகவும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். தமிழ் சினிமாவின் கதாநாயகர்களிலேயே ஒரு வித்தியாசமான தோற்றம் கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்.
இவரின் “ஆண்பாவம்” படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. பாண்டியன், வீ.கே.ராமசாமி, சீதா, ரேவதி உள்ளிட்டவர்களும் இதில் நடித்திருப்பர். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.
அனைத்திலும் இவர் கதாநாயகனாகவே நடித்தும், படங்களை இயக்கியும் வந்தார். “பாட்டி சொல்லை தட்டாதே”, “கதாநாயகன்”, “கோபாலா கோபாலா” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது காமெடி, குணச்சித்திர வேடம் என அனைத்திலும் தனது திறமையை காட்டி வருகின்றார். மறைந்த கேப்டன் விஜயகாந்துடன் “எங்கள் அண்ணா” படத்தில் நகைச்சுவை கலந்த கதாபத்திரத்தில் நடித்திருப்பார்.
மிஷ்கின் இயக்கிய “அஞ்சாதே” படத்தில் பிரசன்னா வில்லனாக நடித்திருக்க, அவருடனே படம் முழுவதும் வந்திருப்பார் பாண்டியராஜன். படம் குறித்து முதலில் பேசும்பொழுது நீங்கள் உங்களது மீசையை படத்திற்காக எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.

17 வயதிற்கு பிறகு நான் இன்று வரை மீசையை எடுத்தது இல்லை. என் முகம் பார்த்தால் எப்படி இருக்குமோ என தெரியாது. நான் மீசை எடுத்து நடித்தால் அது நன்றாக இருக்காது என பாண்டியராஜன் முதலில் பயப்பட்டாராம்.
அதே போல இந்த படத்தில் கொலைக்காட்சி ஒன்றும் உள்ளது, நீங்கள் தான் அதை செய்யப்போகின்றீர்கள் என மிஷ்கின் சொல்ல பதறிப்போன பாண்டியராஜன் நானா? கொலை செய்வதா? எனக்கேட்டாராம்.
படம் வெளிவந்த பிறகு அது மிகப்பெரிய வெற்றி பெற படமானது. இயக்குனர் மிஷ்கினுக்கு மோதிரம் ஒன்றினை பரிசளித்து இருக்கிறார் பாண்டியராஜன்.