danush vijay
danush vijay

பிள்ளைகளை விட வயசுல குறைஞ்ச அம்மாக்கள்?…என்ன நம்ப முடியலையா!…இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கில்…

சினிமாவில் வயதில் குறைந்தவர்களை வயதான தோற்றத்திலும், இளம் வயதுக்காரர்களை முதியவர்களாக கதையின் தேவைக்காக மேக்கப் மூலம் கெட்-அப் சேஞ்ச் செய்து காட்டப்படுவது இயல்பே.

நிஜ வயது குறைவாக இருந்து படத்தில் தங்களை விட மூத்தவர்களுக்கு அண்ணனாக, அக்காவாக இப்படி அவர்களை விட வயதில் கூடியவர்களாக மாறியவர்கள் பலரும் உண்டு.

கதாநாயகனின் நிஜ வாழ்வின் வயது  50ஆக இருக்கலாம், ஆனால் இப்படி அவர்களை விட மூத்தவர்களாக சினிமாவில் காட்டப்படும் கலைஞர்களின் வயது நிஜவாழ்வில் 40, 45 என சற்று குறைவாகவும் இருந்திருக்கிறது.

ஆனால் ஹீரோக்களுக்கு ‘அம்மா’ கேரக்டரில் நடித்தவர்களின் நிஜ வயது, படத்தின் கதாநாயகர்களை விட குறைவாகவும்  இருந்துள்ளது. இது நம்ப முடியாத ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். இப்படிப்பட்ட சம்பவங்களும் நடந்துத்தான் இருக்கிறது திரை உலகில்.

captain miller
captain miller

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்தது “கேப்டன் மில்லர்”. சிவராஜ்குமார் தனுஷுடன் இணைந்து நடித்திருபார் இதில். விஜி சந்திரசேகர் இவர்கள் இருவருக்கும் அம்மாவாக நடித்திருந்தார். இதில் ஒரு தரமான சம்பவம் என்னவென்றால் சிவராஜ்குமாரின் நிஜ வயதோ 61ஆகும். அவரின் அம்மா விஜி சந்திரசேகருடைய வயதோ 57தான் நிஜத்தில்.

“கில்லி” படத்தின் கதாநாயகன் விஜய். வேலு என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்த விஜய்க்கு அம்மாவாக நடித்தவர் ஜானகி சபேஷ். படத்தில் வீட்டிற்குள் நடக்கும் காமெடி காட்சிகளில் விஜய்க்கு ஈடுகொடுத்து நடித்திருப்பார்.

gilli
gilli

குறிப்பாக வாஸ்து படி வீடு சரியில்லை என விஜய் சொல்லும் போது. வீட்ட வித்துடலாமா என அப்பவித்தனமாக கேட்டிருப்பார் அது அரசாங்க குவாட்டர்ஸ் என்பது கூட தெரியாமல்.

ஜானகி சபேஷ் நிஜத்தில் விஜயை விட வயதில் மூன்று மாதங்கள் இளையவராம்.”கில்லி” படவெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு காரணமாகத்தான் பார்க்கப்பட்டது. இவர் “ஜீன்ஸ” உட்பட நிறைய படங்கலில் அம்மா வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.