cinema news
ஸ்டாருக்கு பிறகு ஜொலிப்பாரா கவின்?… இந்த முகத்தை வைச்சிக்கிட்டு எப்படி இதெல்லாம் நடக்கும்?…
தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்களில் பலர் குறுகிய காலத்தில் பெயர் பெற்று விடுகின்றனர். ஏற்கனவே பார்த்த முகம் என்பதனால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்களா? என்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஒருவரை பற்றி நினைத்தால் அவரது முகமே நினைவுக்கு வரும். இப்படி முகத்தை வைத்து தயாரான கதை தான் “ஸ்டார்”. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பழைய ஃபார்முலா தான் கதை இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதத்தில் கொஞ்சம் வித்தியாசத்தை காட்டியுள்ளார் படத்தின் இயக்குனர் இளன்.
நாயகன் கவின் படத்தில் இவருக்கு இரண்டு கதா நாயகிகள். அடி தூள்ன்னு சொல்ல தோனுதா?, இங்க தான் வைச்சாரு டைரக்டர் டுவிஸ்டு. கவினின் முகத்தின் அழகு சில காரணங்களால் மாறிவிட, இதனை காரணம் காட்டி டாட்டா காட்டி சென்றுவிடுகிறார் ப்ரீத்தி முகுந்தன். உருகி, உருகி காதலித்த காதலி கழன்டு சென்ற சோகம் ஒரு பக்கம்.
தன் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் சினிமா லட்சியம் நிறைவேருமா? என்ற குழப்பம் மறு பக்கம். இத்தனை விஷயங்களால் தவிக்கும் கதாநாயகன் தடைகளை தாண்டி சாதித்தாரா? என்பது தான் முடிவு. சாக்லேட் பாயாக துரு, துரு நடிப்பில் கலக்கியிருக்கிறார் கவின். படத்தின் பெயரை போல நிச்சயம் கவின் பெரிய ஸ்டாராக மாறலாம் என்பதன் அறிகுறி தெரியத்தான் செய்கிறது படத்தில்.
காதலுக்கு கண்கள் கிடையாது என்பது உண்மை தான் போலயே என சொல்ல வைக்க இன்னொரு கதாநாயகி. கவினை விரட்டி, விரட்டி காதலிக்கிறாராம் அதிதி போஹன்கர். இருவரும் திருமணமும் முடித்து கொள்கிறார்கள். கவின் நடிப்பில் தேறிவருகிறார். ஆனால் குடும்பத்தில் கஷ்டம் தான் என்ன பன்றது அதுக்காக இப்படியா சென்டிமென்ட் காட்சிகளை வைத்து படம் பார்க்க வந்தவர்களை பிழிந்தெடுப்பது என நினைக்க வைக்கிறது சில இடங்களில்.
இதை மறந்துவிட்டு பார்த்தால் படம் விறுவிறுப்பானது தான் ஸ்டார். கோடம்பாக்கம் இப்பொழுது அதிகமான படங்களை ரசிகர்களுக்கு தர முடியாத நிலைதான் இருக்கிறது. இதனால் நிலவு இல்லாத இரவு நேர கருமேகத்தில் ஜொலிக்கிறது இந்த ஸ்டார்.