தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித்குமார், தனது சினிமா பணிகளுக்கு இடையே கார் பந்தயங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் ஐரோப்பாவில் நடைபெறும் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் ‘Ajith Kumar Racing’ அணியின் சார்பாகப் பங்கேற்று வருகிறார்.
இன்று இரவு முக்கியப் போட்டி: பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ‘Michelin Le Man Cup’ தொடரின் இரண்டாம் சுற்று இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அஜித் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.45 மணிக்கு இந்த விறுவிறுப்பான கார் பந்தயம் தொடங்குகிறது. அஜித்தின் வேகத்தையும் திறமையையும் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சர்வதேச அளவில் AK64 நாயகன்: தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் #AK64 படத்தில் நடிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கும் அஜித், அதே சமயம் சர்வதேச பந்தய களங்களிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அஜித் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.













