தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான காதல் கதைக்குப் பெயர் பெற்ற ‘ஜோ’ (Joe) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம், அடுத்ததாக இயக்கியுள்ள புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ் கதாநாயகியாக இணைந்துள்ளார்.
நடிப்புடன் சேர்த்து இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது துள்ளலான மற்றும் இதமான இசை இப்படத்திற்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘பேரன்பு’, ‘கர்ணன்’ உள்ளிட்ட பல படங்களில் தனது அசாத்தியமான ஒளிப்பதிவால் கவனம் ஈர்த்த தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வலுவான தொழில்நுட்பக் கூட்டணியுடன் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
திரையரங்கு வெளியீட்டை முன்னிட்டு, இப்படத்தின் ‘லுக் புக் ஸ்டார்ட் ஃப்ரம் டோமொரோ’ (Look Book Starts From Tomorrow) பிரத்யேக புரோமோஷன் பணிகளைத் தொடங்கும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.













