cinema news
பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு கிளம்பு…வெளியேற்றப்பட்டாரா சிம்பு?…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகன்,இசையமைப்பாளர்,வசனகர்த்தா இயக்குனர்,தயாரிப்பாளர் என ரசிகர்களை கவர்ந்தவர் சிம்பு.
தமிழ் திரை உலகில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இவர். சமீப காலத்தில் இவருடைய படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பத்தில்லை.
தனது கேரியரை காப்பாற்ற படாதபாடு பட்டு வருகிறார். கமல்ஹாசனின் “தக் லைஃப்” படத்தில் நடிக்க சிம்புவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
துல்கர் சல்மான், ஜெயம் ரவி இந்த படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்கள். சில காரணங்களால் இருவரும் படத்தை விட்டு வெளியேறினர். ஜெயம் ரவி கதாபாத்திரத்துக்கு பதிலாக சிம்பு இணைவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிம்புவுக்கு சினிமா படங்களில் நடிக்க சில தடைகள் இருந்து வந்திருந்து. ஆனால் ‘ஃபெப்ஸிக்கு’ சிம்பு “தக் லைஃப்”ல் நடித்தால் யாரும் சென்று ஒத்துழைப்பு வழங்கக் கூடாது தெரிவிக்கப்பட்டதாம்.
கொரானா காலத்தில் வறுமையில் வாடிய ‘ஃபெப்ஸி’ தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார் மணிரத்தினம்.
“தக் லைஃப்”மணிரத்னம் அவரது படம் என்பதால் ஒத்துழைக்க முடியாமல் போய்விடக்கூடாது என எண்ணிய ஆர்.கே.செல்வமணி, மணிரத்தினத்தை சந்தித்து பேசி இருக்கிறாராம்.
சிம்புவின் பிரச்சினையை சுமுகமாக முடித்துக்கொள்ள சொல்லுங்கள் என சொன்னாராம். இந்த விஷயம் சிம்பு காதுகளுக்கு எல்லாத்தையும் பேசி சீக்கிரமா சரி பண்ணிவிடலாம் என சொன்னாராம்.
ஒருவேளை அவர்கள் எதிர்பார்ப்பது போல சுமூகத்தீர்வு கிடைக்கவில்லை என்றால் “தக் லைஃப்”லிருந்து சிம்பு வெளியேற்றப்படலாம் என ‘வலைப்பேச்சு’அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல துல்கர் சல்மானையும்,ஜெயம் ரவியையும் சமாதானப்படுத்தி படத்தில் மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி ஈடுபட்டு வருவதாகவும் அந்தணன் சொல்லியிருக்கிறார்.