மனநலம் பாதித்தவரை அடித்த டிரைவர் கண்டக்டர்

மனநலம் பாதித்தவரை அடித்த டிரைவர் கண்டக்டர்

சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்கும் ஒருவரை டிரைவர் கண்டக்டர் கீழே இறக்கிவிட்டதால் அந்த விசயம் பூதாகரமடைந்து முதல்வர் ஸ்டாலின் வரை சென்றது.

அது போல குறவர் குடும்பம் ஒன்றை அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ்ஸில் இருந்து இறக்கி விட்ட சம்பவமும் வைரல் ஆனது.

இந்த நிலையில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் ஏறி ரகளை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை கண்டக்டர், டிரைவர் சேர்ந்து தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.