Latest News
மணிகண்டன் விஷம் குடித்து இறந்ததாக ஏடிஜிபி அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நீர்க்கோழியேந்தலை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மணிகண்டன். ஹெல்மெட் போடாமல் சென்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது நிற்காமல் சென்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கப்பட்ட மணிகண்டனை விசாரித்து விட்டு சரியான முறையில் அனுப்பியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் இறந்து விட்டார். இதனால் போலீஸ் அடித்து கொன்றுவிட்டதாக இவர்களின் உறவினர்கள் பெற்றோர் போராடினர். மணிகண்டனின் உடலை மறு பிரேத பரிசோதனை பெரிய அதிகாரிகள் முன்னிலையில் செய்ய வேண்டும் என கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். கோர்ட்டும் அதற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மணிகண்டன் விஷம் குடித்து இறந்திருக்கிறார் என்று வந்திருப்பதாகவும் இதனால் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பவேண்டாம் என ஏடிஜிபி தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மணிகண்டன் போலீசார் தாக்கியதில் இறக்கவில்லை என்று தெரியவருகிறது. எனவே சமூக வலைதளங்களில் இது போன்ற தவறான தகவல்களை பரப்பக்கூடாது.
மேலும் சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டில் இருந்து விஷ பாட்டிலை கைப்பற்றி இருந்தோம். அது தொடர்பாக விசாரணை நடந்ததில் தற்போது, தற்கொலை என உறுதியாகி இருக்கிறது. மேலும் மாணவர் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் மணிகண்டனுடன் வந்து தப்பிச்சென்ற மற்றொரு வாலிபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
முடிவில்தான் ெ்தரியவரும்
போலீசார் தாக்கியதில் மனஉளைச்சலால்தான் மாணவர் இறந்தாரா? என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். இதுதவிர மணிகண்டன் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்திருக்கிறது.. அது எப்படி அவரிடம் வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. போலீசார் விசாரணையின் போது மாணவர் போலீஸ் நிலையத்திற்கு வந்தது முதல் அவரை அவரது தாயார் அழைத்து சென்ற அனைத்து வீடியோ பதிவுகளையும் அந்த ஊர்க்காரர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு காண்பித்துள்ளார். மணிகண்டன் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. மேலும் அவர் எதனால் விஷம் குடித்து இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை முடிவில்தான் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு, ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.