cinema news
பாரதிராஜா பாராட்டு- வசந்தபாலன் நெகிழ்ச்சி
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயில். இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.
வசந்தபாலன் இயக்கத்தில் 7 வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் படம் இது.
இந்த படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா கீழ்க்கண்டவாறு பாராட்டியுள்ளார்.
இன்று காலை இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அழைத்து “பாலா இந்த மாதிரி கதையெல்லாம் எங்கய்யா பிடிக்கிற.?பிரமாதமாக இருக்கு. ஜீவியும் அந்த புதுப்பொண்ணும் என்ன மாதிரி நடிச்சிருக்காங்க.சென்னை தமிழ எங்கய்யா கத்துக்கிட்ட நல்லாயிருந்துச்சுய்யா என்றுபாராட்டியவண்ணம் இருந்தார்.மகிழ்ச்சி
என்று கூறியுள்ளதாக வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.