cinema news
நான் யதார்த்தமா சொல்ல அதை பதார்த்தமா படத்துல வச்சுட்டாரு!…அப்புறம் என்ன வத்திக்குச்சி பத்திக்கிச்சு…
ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமான “தீனா” மிகப்பெரிய வெற்றி பெற்றது. காதல் கதைகளில் அதிகமாக தனது செலுத்தி வந்து கொண்டிருந்த அஜீத்குமார் “தீனா”வில் ஆக்சன் ஹீரோவாக மாறி இருந்தார்.
தற்போது ரீ-ரீலீஸாகியுள்ள நேரத்தில் சுமார் 20 ஆண்டுக்கு முன்னர் வந்த “தீனா” படத்தை பற்றி ஏராளமான தகவல்கள் வலைதளத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. இதே போல விஜயின் “கில்லி” படமும் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இந்த இரண்டு படங்கள் குறித்த ஒப்பீட்டு ஆராய்ச்சி இப்பவும் நடந்து தான் வருகிறது. எப்பொழுதும் போல இருவரின் ரசிகர்களும் போர் களத்தில் நிற்பது போலத்தான் இருந்து வருகின்றார்கள்.
படத்தில் வரும் “வத்திக்குச்சி பத்திக்காதுடா” பாடலை எழுதியவர் வாலி. பாடலை எழுது முடித்துவிட்ட வாலி ஏ.ஆர்.முருகதாஸிடம் கருத்து கேட்டிருக்கிறார். சிறிது நேரம் மௌனமாகவே இருந்திருக்கிறாராம் முருகதாஸ்.
அதற்கு வாலியோ, இதுக்கு தான்யா புது டைரக்டர் படத்துக்கு எல்லாம் நான் பாட்டு எழுத மாட்டேன். நல்லாயிருக்கு, நல்லாயில்லன்னு ஏதாவது சொல்லு. அதை விட்டுட்டு அமைதியா இருக்க என கோபப்பட்டாராம்.
முருகதாஸ் பொறுமையுடன் அதை கேட்டுவிட்டு இல்ல சார் நான் அந்த படத்துல கதாநாயகன் தனது வாயில் எப்பொழுதும் தீக்குச்சியை வைத்து இருப்பது போலத்தான் அவருடைய கதாபாத்திரத்தை நான் உருவாக்கி உள்ளேன்.
நீங்களும் அதுக்கு ஏற்றார் போல “வத்திக்குச்சி பத்திக்காதுடான்னு” எழுதி கொடுத்து இருக்கீங்களே. அத நெனச்சு தான் அமைதியாகிட்டேன் என சொல்லி விளக்கமளித்திருக்கிறார் முருகதாஸ்
கதாநாயகன் பத்தி உங்களுக்கு தெரிஞ்சு தான் நீங்க எழுதினீங்களான்னு? யோசிச்சிட்டு இருக்கேன். அதெல்லாம் இல்ல நான் ஏதோ எதார்த்தமாகத்தான் எழுதினேன் உனக்கு பிடிச்சிருந்தா பாட்ட படத்துல வச்சுக்கோ என முருகதாஸிடம் சொன்னாராம் வாலி.