“ஆடுகளம்”, “அஞ்சாதே” படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நரேன். சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த இவர். சில படங்களில் கதாநாயகன், கதாநாயகிக்கு அப்பா கேரக்டரில் நடித்திருக்கிறார்.
“ஆல்-இன்-ஆல் அழகுராஜா” படத்தில் கார்த்தி, காஜல் நடிக்க, காஜல் அகர்வாலுக்கு தந்தையாக நடித்திருப்பார்.
படத்தில் இவரும், காஜல் அகர்வாலும் சேர்ந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் மிக பிரபலம் அடைந்தது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான ‘ரைம்ஸ்’ சொல்லி கார்த்தியிடமிருந்து தனது மகளை பிரிக்க னினைக்கும் காட்ச்சியில் பின்னியிருப்பார் நடிப்பில்.

தனுஷ், சூரி, சச்சு நடிப்பில் வெளிவந்த “நய்யாண்டி” வெற்றி வாகை சூடியது. பலம் பெரும் நடிகையான சச்சுவிற்கு பேத்தியாக நஸ்ரியா நடிக்க அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க , ஸ்ரீமன், சத்யன் தங்களது சகோதரனின் காதலி என்பது தெரியாமல் நஸ்ரியாவிற்கு ‘ஜொள்ளு’ விட்ட காட்சிகள் படத்திற்கு பலமாக பார்க்கப்பட்டது.
“நய்யாண்டி” படத்தில் வனரோஜா நஸ்ரியாவின் அப்பா பூங்கவனமாக வந்திருப்பார் நரேன். படத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சி ஒன்று படமாகப்பட்டதாம். சென்டிமென்டை கசக்கி பிழியவேண்டும் என இயக்குனர் சற்குணம் சொல்லியிருக்கிறார்.
அதை அப்படியே கேட்டு நடித்த நரேன். தன்னை அறியாமல் நஸ்ரியாவின் நெற்றியில் முத்தம் கொடுத்து விடுவாராம். காட்சி முடிந்தவுடன் நஸ்ரியாவை கூப்பிட்டு முன்னரே திட்டமிடாமல் இப்படி நடித்ததற்கு வருந்தியிருக்கிறாராம்.
இதைக்கேட்ட நஸ்ரியாவோ நீங்கள் இப்படி செய்தது காட்சிக்கு பலமாக அமைந்தது என்றாராம். அதோடு அவரின் தந்தையை அழித்து இது என் ரீல் டாடி இவர் என் ரியல் டாடி என எல்லார் முன்னிலையிலும் மகிழ்ச்சி பொங்க சொன்னாராம்..