cinema news
முருகதாஸ் படத்துக்கு சம்பளத்தை குறைத்த ரஜினி – இதுதான் காரணமா?
லைக்கா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பேட்ட படத்துக்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இப்படம் ஒரு அரசியல் படம் எனவும், நாற்காலி என பெயரிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், நாற்காலி தனது அடுத்த படம் அல்ல என முருகதாஸ் கூறியிருந்தார்.
ரஜினிக்கு இப்படம் 166வது படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்துக்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. லைகா மெகா பட்ஜெட்டில் தயாரித்த 2.0 படம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்காததால் ரஜினி இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.