அந்த ஒரு பாட்ட மட்டும் தான் பாடவே மாட்டேன் என் லைஃப் ஃபுல்லா!… தேவா இப்படி சொல்ல காரணமான அந்த பாடல் எது தெரியுமா?…
“வியாபாரி” படத்தில் எஸ்.ஜே.சூர்யா பாடும் ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்’ பாடலுக்கு இசை அமைத்தவர் தேவா. இந்த பாடல் ஒலிப்பது செய்து முடிக்கப்பட்டது.
அதை கேட்ட எஸ்.ஜே.சூர்யா தனது தாயினுடைய நினைவு வந்ததால் தேம்பி, தேம்பி அழத்தவங்கினாராம். தேவா கொஞ்சம் சென்டிமென்ட் பார்க்கின்ற பேர்வலியாம். தேவாவிற்கும் அவரது தாய் என்றால் அலாதி பிரியாமாம். தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட மகனாம் அவர்.
முதலில் இந்த பாடலை தேவா பாடுவதாக தான் இருந்ததாம். பாடல் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலே திடீரென வந்த போன் காலில் தேவாவின் அம்மாவின் உடல் நிலையில் சரியில்லாமல் போனதாம். இதைக்கேட்ட தேவா பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றாராம்.
அந்தப் பாடலை பாடியதால் தான் தன் தாயாருக்கு உடல்நிலை திடீரென்று சரியில்லாமல் போனது என சிந்திக்க வைத்து விட்டதாம் அந்த பாடல். இதை அபசகுணமாக கருதிய தேவா அந்த பாடலை பாட மாட்டேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டாராம்.
அவருக்கு பதிலாக ஹரிஹரன் பாடலை பாடியிருந்தார். ஹரிஹரன் பாடியது குறித்து ஒரு முறை பேசியிருந்த தேவா. தான் பாடியிருந்தால் கூட இவ்வளவு அழகாக வந்திருக்குமா எனத்தெரியாது அந்த அளவு சிறப்பாக பாடியுள்ளதாக பெருந்தன்மையோடு சொல்லியிருப்பார்.
பாடல் ஒலிப்பதிவின் போது மட்டும் அல்லவாம், இன்று வரை அந்த பாடலை பாடலைக்கூடாது என்ற முடிவில் தீர்மாணமாக இருந்து வருகின்றாராம் தேவா. அது மட்டுமல்ல வாழ்வின் இறுதி நாள் வரையிலும் எந்த மேடையிலுமோ, வேறு எங்குமோ இந்தப பாடலை மட்டும் பாடவே கூடாது என்ற முடிவிலும் இருக்கிறாராம் தேவா.