முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் யார் ஹீரோ? – முக்கிய அப்டேட்

303

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தை இயக்குனர் முருகதாஸ் தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பின் முருகதாஸ் யாரை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறா என்கிற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. விஜயை வைத்து துப்பாக்கி 2 என விஜய் ரசிகர்களும், அடுத்து அவர் அஜித்துடன் கை கோர்க்கவிருப்பதாக அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். ஆனால், முருகதாஸ் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரடெக்‌ஷன்ஸ் தனது அடுத்த படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார். யார் ஹீரோ என கண்டுபிடியுங்கள் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, இந்த நிறுவனத்திற்கே முருகதாஸ் அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், யார் ஹீரோ என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  விஜயின் புதிய திரைப்படம் - தெறிக்க விடும் தகவல்கள் உங்களுக்காக!