சுசித்ராவின் வீடியோக்கள் வெளியான பிறகு கோடம்பாக்கத்தில் மிகப்பெரிய ஒரு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தொடர்புடைய நபர்கள் என சுசித்ரா கூறியுள்ள அனைவருமே திரும்பிப் பார்க்கப்பட வேண்டிய ஒரு முக்கிய புள்ளிகள் தான் கோடம்பாக்கத்தையும், தமிழ் சினிமாவையும் பொறுத்தவரை.
முதல் ஆளாய் இந்த விவகாரத்தில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்குமார் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சட்ட ரீதியாக சந்திப்பேன் என அவரது கருத்தை சொல்லி இருக்கிறார். சுசித்ரா சொன்ன பெயர்களில் குறிப்பிடத்தக்கவர் பாடகியும் நடிகையுனான ஆண்ட்ரியா. இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், தனது அடுத்த படத்தில் கமிட்டாகி இருக்கு நடிக்க தயாராகி வருகிறார் அவர்.
“ஸ்டார்” படம் வெளியானதை எடுத்து வெற்றிமாறனுடைய தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு “மாஸ்க்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கவின் உடன் அடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எத்தனை சர்ச்சைகள் இருந்தால் என்ன?, எது நடந்தாலும் நான் என் வேலையை பார்த்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதைத்தான் இந்த படத்தில் அவர் கமிட்டாகி இருப்பது தெரியப்படுத்தியுள்ளது.
சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில் அஜீத்குமாரையும் இழுத்து உள்ளார். ஆனால் அவரை மட்டுமே நல்ல விதமாக அவர் சொல்லியிருக்கிறார். அவர் ரொம்ப க்யூட் என சொல்லியிருப்பது அவரது விடியோ பற்றிய ஆர்வத்தை காண தூண்டுதலாக அமைந்துள்ளது.