cinema news
மீண்டும் லீக் ஆன தர்பார் புகைப்படங்கள் – படக்குழுவினர் அதிர்ச்சி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.
இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன்பின் ஜெய்ப்பூரில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. அந்த படப்பிடிப்பிற்காக ரஜினியும், நயன்தாராவும் விமானத்தில் செல்லும் புகைப்படம் ஏற்கனவே வெளியானது.
ஏற்கனவே, தர்பார் படப்பிடிப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்நிலையில், தற்போது மீண்டும் சில புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.