cinema news
சசிகுமாரின் சிரிப்புக்கு பின்னால் உள்ள ரகசியம்?…எல்லா புகழும் நாராயணனுக்கே…
“சுப்பிரமணியபுரம்” படத்தின் மூலம் கதாநாயகன் ஆனவர் சசிகுமார். அவரது இயக்கத்திலேயே நடித்ததோடு நிறுத்தாமல், சமுத்திரக்கனி இயக்கிய “நாடோடிகள்” படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படங்கள் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்ததால் தமிழ் சினிமாவிற்கு புதுசாக ஒரு கதாநாயகன் கிடைத்துவிட்டார் என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்தது அவரை.
சசிகுமாரினுடைய சிறப்பாக பார்க்கப்படுவது படங்களில் அவர் சிரிக்கும் விதமே. அந்த சிரிப்பை ஏராளமான ‘மிமிக்ரி’ ஆர்டிஸ்ட்டுகள் கூட தங்களது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி சசிகுமார் பெயரை குறிப்பிட்டு சொல்லி அவர் சிரிப்பது போல என சொல்லி மேடையில் கைதட்டுகளை பெற்று வருகின்றனர். இந்த சிரிப்பு குறித்த பின்னணியை அவர் ஒரு முறை தெரிவித்திருக்கிறார். அதாவது அந்த சிரிப்பின் சத்தத்திற்கு உண்மையான சொந்தக்காரர் நமோ நாராயணன் என்பவர் மட்டும் தானாம்.
படத்தில் இதுபோல சிரிக்க பலமுறை முயற்சி செய்திருக்கிறார் சசிக்குமார். ஆனால் அது அவருக்கு கை கொடுக்கவில்லையாம். ஆகையால் டப்பிங் ஆர்டிஸ்ட்டான நமோ நாராயணனை அழைத்து ஒவ்வொரு முறையும் சசிகுமார் சிரிக்க வேண்டிய இடங்களுக்கு டப்பிங் கொடுப்பாராம்.
தான் செல்லும் இடங்களிலெல்லாம் ரசிகர்கள் தன்னை சிரித்து காட்ட சொல்லும் பொழுது அதற்கு நான் அவரை தான் வரச் சொல்ல வேண்டும், சத்தியமாக அந்த சிரிப்புக்கும், எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது என சசிகுமார் அடிச்சு சொல்லிக்கொண்டு வருகின்றாராம்.