ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு? – புகைப்படத்தால் அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

265

நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்ளுக்கு முன்பு முகநூல், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஏற்கனவே ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், அப்போது அவர் பேசப்படவில்லை. ஆனால், மொட்டைமாடியில் சேலை அணிந்தவாறு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பலரின் புரைஃபைல் படமாகவும் அவர் மாறினார்.

ramya

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மிகவும் உடல் எடை மெலிந்து அவர் ஒல்லியாக தோற்றமளிக்கிறார். அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது ரம்யா பாண்டியன்தானா? அவருக்கு என்ன ஆச்சு? ’ என பதட்டத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாருங்க:  கொரோனா என பெயர் வைத்ததால் அவதிக்குள்ளாகி வரும் பெண்