cinema news
உங்களுக்கு சூட்டிங் தான் நடக்கணும் நான் பாத்துக்குறேன்!…சொன்னதை செஞ்சு காட்டிய கவுண்டமணி…
இயக்குனர் வெங்கடேஷ் “கமர்ஸியல்” படங்களை மட்டுமே அதிகமாக குறி வைத்து எடுப்பவர். விஜயை வைத்து “செல்வா”,”நிலாவே வா”, “பகவதி”, அர்ஜூனை வைத்து “வாத்தியார்” என பல படங்களை இயக்கியுள்ளார்.
அருன் விஜயை வைத்து “மலை மலை”, “மாஞ்சா வேலு” படங்களையும் எடுத்துள்ளார். பிரசாந்த் நடிப்பில் வெளியான “சாக்லேட்” படமும் இவரின் கைவண்ணமே.
“கில்லாடி”,”குத்து”,”நேத்ரா”வும் இவரது படைப்புகளே. சரத்குமாரை வைத்து இவர் இயக்கிய “ஏய்”என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் இவரது படங்களை.
அது மட்டும் அல்ல “அங்காடித்தெரு” படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார்.
ஒருமுறை கவுண்டமணி இவரை போனில் தொடர்பு கொண்டு இரண்டு நாட்கள் சூட்டிங் இல்லாமல் இருக்கின்றேன், தேவைப்பட்டால் என்னை பயன்படுத்திக்கலாம் என்று சொன்னாராம்.
“சப்ஜெக்ட்” எல்லாம் ரெடியா தான் இருக்கிறது. ஆனால் அதே தேதியில மற்ற நடிகர்கள் நேரம் ஒதுக்கி கொடுப்பாங்களா என்று தெரியாது என வெங்கடேஷ் சொல்லி இருக்கிறார்.
சரி இருங்க ஒரு பத்து நிமிஷத்துல உங்க லைனுக்கு திருப்பிவரேன் என்று சொல்லிவிட்டு கவுண்டமணி போனை வைத்து விட்டாராம்.
பத்து நிமிடத்தில் மீண்டும் இணைப்பில் வந்து நான் சரத்குமாரிடமும், செந்திலிடமும் பேசி டேட்ட கன்பார்ம் பண்ணிவிட்டேன். அவர்களும் சூட்டிங் வர்றதுக்கு தயாரா இருக்காங்க. நீங்க மீதி வேலைகளை பாருங்க என வெங்கடேஷிடம் சொன்னாராம்.
மகாபிரபு படத்தில் வந்த ஒரு நகைச்சுவை காட்சி படமாக்க பட்டதின் பின்னனி இது தான் என இயக்குனர் வெங்கடேஷ் ஒரு பேட்டியின் போது சொல்லியிருந்தார்….