cinema news
ஆசை இல்ல பசி…அஜீத் பேசிய டச்சிங் ஹைலைட் வசனம்…
அஜீத்குமார் சினிமாவிற்கு வந்த புதிதில் ராசி இல்லாதவர் என முத்திரைகுத்தப்பட்டவர். நான் அதிக வெற்றிகளை பார்த்தவன் இல்லை, அதிகம் தோல்விகளை பார்த்தவன் என சொல்லிக்கொண்டு தொடர்ந்து தன் நம்பிக்கையோடு போராடி இப்போது புகழின் உச்சியில் இருந்து வருபவர். தனக்கு நடந்து விபத்துகளால் சினிமா கேரியரே முடிந்து விடும் என்ற நிலைகளை எல்லாம் கடந்து சாதனை படைத்தவர்.
அஜீத்தின் சினிமா வரலாற்றில் முக்கியமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது “பில்லா -2”. சக்ரி டோல்டி இயக்கிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் எந்த அளவு பேசப்பட்டதோ அதை விட அதிகமான பாப்புலாரிட்டி படத்தின் பேக் கிரவுண்ட் மியூசிக்கிற்கு கிடைத்தது. அஜீத் என்றாலே அழகு என்பது தான் இந்திய சினிமா ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.
ரஜினி நடித்த “பில்லா” படத்தை ரீ-மேக் செய்து நடித்திருந்தார் அஜீத். “பில்லா -2″விற்கு முன்னரே அது முதல் பாகமாக வந்து ஸ்டைலான அஜீத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. பக்கா லுக்கில் அஜீத், அதிர வைத்த மியூசிக் என படத்திற்கு எத்தனை ப்ளஸ்கள் இருந்திருந்தாலும், “பில்லா -2″வின் வசனங்களும் செம்ம பாப்புலர் ஆனது. நீளமான டயலாக்குகளை பேசாமல் சிம்பிள் பஞ்ச்களை பேசியிருந்தார் அஜீத்.
‘மத்தவங்க பயம் நமக்கு பலம்’, இதுவரை கூட இருந்தவங்க தான் காட்டி கொடுத்திருக்காங்க’ இதெல்லாம் அதிக கைத்தட்டல்கள் அஜீத்திற்கு வங்கிக்கொடுத்த டயலாக்ஸ். இதில் மாஸ்டர் பீஸாக பார்க்கப்படுவது, அஜீத்தை பார்த்து இளவரசு ‘ரொம்ப ஆசைப்படுறயோ டேவிட்’ என கேட்பார். அதற்கு அஜீத் ‘ஆசை இல்லை அண்ணாச்சி பசி’ என பதில் சொல்லியிருப்பார். கலக்சனில் பெரிய அளவில் கல்லாக் கட்டாத நிலையிலும், அதிக நாட்கள் தியேட்டர்களில் ஓடாத படமாக இருந்தாலும் “பில்லா – 2” விற்கு என தனி பேன்ஸ் இன்று வரை இருந்து வருகிறார்கள்.
மாஸான டான் கேரக்டரில் அஜீத் நடித்து அதிக ரசிகர்களை ஸ்கோர் செய்த “பில்லா -2” கடந்த 2012, ஆண்டு இதே ஜூலை பதிமூன்றாம் தேதி வெளியானது. இன்றோடு படம் ரிலீஸாகி பதிமூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் இன்டர்நேஷனல் டான் டேவிட் பில்லா. கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்ட அஜீத்தின் பிறந்த தினத்தில் “பில்லா – 2” ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.