“ஹரா” படம் பெரிய அளவில் பெரை வாங்கித்தரும் என் எதிர்பார்த்திருப்பார் மைக் மோகன். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்துக்களோ எப்படி உள்ளது என்றால் “கோட்” படம் வெளியான் பிறகு கூட இந்த “ஹரா”வை வெளியிட்டிருக்கலாம் என்பதாகக்கூட இருக்கும். காரணம் படத்தின் எதிர்பார்த்தது போல எதுவுமே இல்லை என்பதால்.
ஆனால் ஒரே ஒரு ஆறுதல் தரும் விஷயமாக அமைந்ததாக சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும் “ஹரா”வை பொறுத்தவரை. ராமராஜன் கம்-பேக் கொடுத்திருந்த “சாமனியன்” படத்தின் முதல் நாள் வசூலை விட “ஹரா” அதிகாமாக வசூலை கொடுத்தது என்பது மட்டுமே.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஈடுபாடில்லாமல் தான் மோகன் முதலில் நடிக்க வந்திருப்பார் போல அல்லது அவரின் வெற்றி இந்த அளவில் இருக்கும் என்பதை அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் போலவே தெரிகிறது. காரணம் சமீபத்தில் அவரது பழைய நினைவுகளை பற்றி அவர் சொல்லியுள்ளது.
“கோகிலா” படத்தில் அவர் நடிக்க வரும் முன்னர் “சின்டிகேட் வங்கியில் இவருக்கு வேலை கிடைத்திருந்திருக்கிறது. படத்தை முடித்துவிட்டு பணியில் தொடர்கிறேன் என மோகன் வங்கி மேலாளரிடம் கோரியிருக்கிறார். மேலாளரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருகிறார்.
‘லாஸ் ஆப் பே’ முறையிலே மோகனது வேலை கணக்கிடப்பட்டிருக்கிறதாம். ஆனால் அடுத்ததடுத்து திரைப்படங்கள் என சினிமாவில் பயங்கர பிஸியானதால் மோகனால் வங்கி வேலையை தொடரவே முடியவில்லையாம்.
“கோகிலா”விற்கு பிறகு “பயணங்கள் முடிவதில்லை”, “கிளிஞ்சல்கள்” என இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றிகளை பெற்றுத்தந்தது. மோகனே நினைத்தாலும் அவரால் சினிமாவை தவிர்த்திருக்க முடியாது அப்படி ஒரு மாஸ் இருந்தது அவருக்கு.
ஆனால் இப்போது வெளியாகியுள்ள “ஹரா”வால் மோகனுக்கு முன்னேற்றம் கிடைக்காமல் போனலும், “கோட்” படம் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்று “ஹரா”வில் கிடைக்காத திருப்பத்தை “கோட்” தரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மோகனின் ரசிகர்கள்.