cinema news
கமல் தானா இல்ல வேற யாராவது மேக் – அப் போட்டு வந்திருக்காங்களா?…சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஷங்கர் – உலக நாயகன்!…
இன்று காலை ஒன்பது மணிக்கு வெளியாகி உள்ளது கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் “இந்தியன் – 2”. 1996ம் ஆண்டு “இந்தியன்” முதல் பாகம் ரிலீஸானது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தள்ளினர் அந்த காலத்தைய சினிமா ரசிகர்கள்.
படத்தில் சேனாபதி கமல் தான் ஹைலைட். தனது கொள்கைக்காக பெற்ற மகனையே பலியிடும் காட்சியில் உணர்ச்சிவசப்பட வைத்து கண்களை குளமாக்கியிருந்தார். வர்ம கலையால் வில்லன்களை வீழ்த்தும் கமல். இப்படியான பிரமிப்பை ஏற்படுத்தி சூப்பர் ஹிட் ஆகியது “இந்தியன்” முதல் பாகம்.
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வந்துள்ளார் சேனாபதி இந்தியன் தாத்தா.
அனிரூத் இசையமைக்க கமல்ஹாசனை தசாவதாரத்தை மிஞ்சும் அளவில் கெட்-டப்புகளை போட்டு நடித்துள்ளார் “இந்தியன் – 2″வில் என பேசப்பட்டு வருகிறது.
பல தடைளையும், இடைஞ்சலையும் தாண்டி படம் ரிலீஸ் ஆகி விட்டது. ரசிகர்களுடன் படத்தை பார்த்து மகிழ “இந்தியன் – 2″வின் ஹீரோ கமல்ஹாசனும், அதன் இயக்குனர் ஷங்கரும் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்து சர்பிரைஸ் கொடுத்துள்ளனர்.
படத்தில் கண்டுபிடிக்க முடியாத அளவில் கெட்-டப்புகளை போட்டுருந்த கமல்ஹாசனை போலவே வேறு யாரும் மேக்-அப் போட்டு வந்திருக்கிறார்களா? என தியேட்டரில் இருந்த ரசிகர்களை குழப்பமடையச் செய்தது.
படம் பார்க்க வந்த ரசிகர்கள் “இந்தியன் – 2” என அச்சிடப்பட்டிருந்த டி.ஷர்டுகளை அணிந்து வந்து ஆடி, பாடி கொண்டாடி வருகின்றனர். “இந்தியன் – 2″ல் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன டெக்னாலஜிக்கள் தமிழ் சினிமாவை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.