Entertainment
சங்கிலி இனி நீ தான் கங்குலி…ராமராஜன் உதவி இயக்குனர் ஆனது இப்படித் தானோ?…
சினிமாவில் நடித்து பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவை பற்றியே தனது சிந்தனை முழுக்க இருக்க வேண்டும் என்பதற்காகவே தியேட்டரில் வேளை பார்த்தவர் ராமராஜன். அவர் நினைத்தது போலவே பெரிய ஹீரோவாகி பின்னர் ஒரு தியேட்டருக்கே சொந்தக்காரராக மாறியவரும் இவரே.
ஹீரோ ஆசையில் கோடம்பாக்கத்திற்கு வந்த இவருக்கு முதலில் கிடைத்தது உதவி இயக்குனர் பணிதான். இயக்குனர் ராமநாராயணனிடம் அசிஸ்டன்டாக இருந்து முப்பத்தி ஐந்து படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.
அதே போல தான் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அனைத்திலும் சோலோவாகவே கலக்கியிருப்பார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் கூட வேறு ஹூரோக்களுடன் இணைந்து நடித்திருத்திருந்தனர்.
ஆனால் தான் நடிக்கும் படங்களில் இவர் மட்டுமே டாமினேட் செய்வார். மறைந்த கேப்டன் விஜயகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் செகன்ட் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என் சான்ஸை ரிஜெக்ட் செய்து கெத்து காட்டியவர் ராமராஜன்.
எம்.ஏ.ராஜா இயக்கிய “பெளர்ணமி நிலவில்” படத்தின் தயாரிப்பு தரப்பின் நபராக ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றாராம் ராமராஜன். அப்போது அங்கே உதவி இயக்குனராக இருந்தவருக்கு உதவ சென்றாராம்.
காட்சிகளை சரியாக குறித்த வைத்த இவரின் திறமையை பார்த்து அசந்த ராஜா. நீ தான் அசிஸ்டன்ட் டைரகடர், இப்படித் தான் இருக்க வேண்டும் என ராமராஜனை பாராட்டினாராம்.
அதன் பிறகே ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினாராம் இவர். “மீனாட்சி குங்குமம்” படத்தில் தான் முதன் முதலாக உதவி இயக்குனராக அறிமுகமானாராம் ராமராஜன்.