Entertainment
விக்ரம் படத்தின் காப்பியா இந்தியன்-2…என்னடா இது புது புரளியா இருக்கு?…
“இந்தியன் – 2” வின் ரிலீசை எதிர்பார்த்து நாடு முழுவதுமுள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஷங்கர் – கமல் கூட்டணியில் வெளியான “இந்தியன்” முதல் பாகம் சக்கைபோடு போட்டது.
தமிழ் சினிமாவில் புதிய சாதனைகளை படைத்தது. படத்தில் இரண்டு வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தாலும் அப்பா கமலாக வந்த சேனாபதிதான் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார்.
ஆடியோ ரிலீஸின் போது கிடைத்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் துடைத்து எறிந்தது “இந்தியன்- 2” டிரையலர். படத்தில் கமல் எத்தனை கெட்-டப்புகள் போட்டு நடித்துள்ளார் என்பதை வைத்து ஒரு பரீட்சையே நடத்தி விடலாம் போல் அந்த அளவு மேக் – அப்பிற்கு படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கமல்ஹாசன் சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசனின் திரைப்பயணத்தை இரண்டாகக்கூட பிரித்து பார்க்கலாம். அவர் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் “விக்ரம்” படத்திற்கு முன் “விக்ரம்” படத்திற்கு பின் என. கமல்ஹாசனே ஒத்துக்கொள்ளும் விதமாகத்தான் படத்தினுடைய முடிவு அமைந்தது.
தற்போதைய கமல்ஹாசனை பற்றிய புது தகவல் ஒன்றை வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த “விக்ரம்” படத்தில் இன்டர்வல் ப்ளாக்கில் தான் கமல் வருவார். தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு புதுமையாகவே பார்க்கப்பட்டது. படம் துவங்கியதிலிருந்து ஹீரோக்கள் க்ளைமேக்ஸில் இறந்து விடும் படங்கள் வரை எல்லாவற்றியலும் கதாநாயகர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.
ஆனால் “விக்ரம்”படத்தில் இதிலிருந்து வேறுபட்டிருந்தார் கமல். இதே போல தான் நாளை மறு நாள் வெளியாக உள்ள “இந்தியன் – 2” விலும் இன்டர்வெல் ப்ளாக்கில் தான் கமலின் இன்ட்ரோ இருக்கிறது என அடித்துச் சொல்லியிருக்கிறார் பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.
அவர் எப்போ வந்தால் என்ன பல வருடங்களுக்கு பிறகு தங்களின் ஃபேவரட் தாத்தாவை பார்க்க தயாராகி வருகின்றனர் தாத்தா கமல் – ஷங்கர் ரசிகர்கள்.