---Advertisement---

ஐம்பதுல அடிச்சி தூக்கிய ஹீரோஸ்!…அப்போ இவங்கெல்லாம் அட்டர் ப்ளாப்பா?…

Published on: June 18, 2024
vijay vijayakanth
---Advertisement---

சினிமாவில் 25, 50, 75, 100 இந்த எண்களுக்கு எப்பவுமே ஒரு தனி மவுசு இருக்கும். இந்த நம்பர்களை கடந்து ஓடும் படங்களின் வெற்றிகள் இதை வைத்தும் கணக்கிடப்படும்.அதே மாதிரி தான் நடிகர்களின் படங்களின் எண்ணிக்கையும்.

ஒரு நடிகர் ஹீரோவாக 50வது படத்தை கடக்கிறார் என்றாலே அவர் ஸ்டார் வேல்யூ உள்ளவராகத்தான் கணக்கிடப்படுவார். இப்போதெல்லாம் 25 என்ற எண்ணிக்கையை கடந்தாலே போதும் அவர் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோதான்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல்,அஜீத், விஜய். என ஆளுமைகளை பார்த்து வந்தது கோலிவுட். இந்த நடிகர்களின் 50வது படங்கள் எதுவென்று தெரியுமா? அதில் எது, எது வெற்றி பெற்றவை, தோல்வியடைந்தது எது என தெரியுமா?.

எம்.ஜி.ஆரின் 50படம் “நல்லவன் வாழ்வான்”. இது மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்ததாக சொல்லப்பட்டது. சிவாஜியின் 50வது “சாரங்கதாரா”, இதுவும் தோல்வி தான். தொட்டதெல்லாம் ஹிட்டா மாற்றிக்காட்டும் ரஜினி கூட தனது 50வது படத்தில் வெற்றியை கோட்டை விட்டார்.

தெலுங்கு படமாக அமைந்தது இவரதுன் 50. “டைகர்” எதிர்பார்த்த வெற்றியை தராத படம் ரஜினிக்கு. கமலுக்கு இதே கதி தான்.எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த “கோகம் முப்பது வருஷம்” படம் இதுவும் எதிர்பார்த்து போல அமையவில்லை.

அடுத்த படியாக விஜயகாந்த் நடித்த “நீதியின் மறுபக்கம்”. விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம். விஜயகாந்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது இது. விஜய் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத படமாக மாறியது “சுறா”. இது தான் அவரது 50வது படம். எஸ்.பி.ராஜ்குமார் இயக்கிய படம்.

யார் வேண்டுமானாலும் “சுறா”வை மறந்துவிடலாம் ஆனால் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். விஜய் ப்ளாப் படங்கள் லிஸ்டில் சேர்ந்து விட்டது “சுறா”.

vikram ajith
vikram ajith

விக்ரமின் 50வது படமாக ஷங்கர் இயக்கிய “ஐ”இருக்கிறது. நினைத்த அளவு வெற்றி கிடைக்காவிட்டாலும் ஒரளவுக்கு ஓடியது “ஐ”. அஜீத் நடித்த “மங்காத்தா”, அஜீத் படங்களிலேயே இப்படி ஒரு ஹிட் ஆனது கிடையாது என சொல்ல வைத்த படம்.

ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக மாறியது இன்றும்”மங்காத்தா”வுக்கு என தனி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

விஜயகாந்தின் “நீதியின் மறுபக்கம்”, அஜீத் நடித்த “மங்காத்தா”, இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து தனது 50வது படத்தை வெற்றி படமாக கொடுத்த மற்றொரு நடிகர் விஜய்சேதுபதி. கடந்த வாரம் வெளியாகி ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் “மகாராஜா” தான்.

পড়তে ভুলবেন না

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!

தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026 நினைவு நாள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026: ஆரிய சமாஜ நிறுவனர் நினைவு நாள்