Connect with us

காதலில் விழுந்த சுனைனாவை கரம் பிடிக்கப்போவது இவரு தானா?…வெளிவந்த திருமண  அறிவிப்பு!…

sunaina

cinema news

காதலில் விழுந்த சுனைனாவை கரம் பிடிக்கப்போவது இவரு தானா?…வெளிவந்த திருமண  அறிவிப்பு!…

 

“குமார் v/s குமாரி” தெலுங்கு படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் சுனைனா. 2008ம் ஆண்டு வெளிவந்த “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். நகுல் கதாநாயகனாக நடித்திருந்தார் இதில். பின்னர் நகுலுடன் சேர்ந்து “மாசிலாமணி” படத்திலும் நடித்தார்.  முதல் படத்தில் பெரிய அளவில் முத்திரை பதிக்கவில்லை இவர்.

அருள்நிதியுடன் இவர் நடித்த “வம்சம்” படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. விஷ்னு விஷாலுடன் “நீர் பறவை” படத்திலும் நடித்தார், இந்த இரண்டு படங்களும் சுனைனா மீது ரசிகர்களின் பார்வையை விழ செய்தது. ஆனால் அதன் பின்னர் கதாநாயகியாக இவர் நடித்தது பெரிய அளவில் எடுபடவில்லை என்றே தான் சொல்ல வேண்டும்.

விஜயின் “தெறி” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் இவர். விஷாலின் “லத்தி”, “சமர்” போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது வாய்ப்புகள் பெரிதாக இல்லாமல் சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கியிருக்கும் சுனைனா தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று இப்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

sunaina

sunaina

35 வயதாகும் சுனைனா, தனது இன்ஸ்டா பக்கத்தில் இருவருடன் கைகோர்த்து நிற்கும் படத்தினை வெளியிட, இது குறித்த ரசிகர்களின் கேள்விக்கு தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக பதிலளித்துள்ளார்.

மணமகன் யாராக இருக்கும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என நம்பலாம். இப்படி எதுவுமே சொல்லாமல் படத்தை அப்லோட் செய்து புதிராக பதிவிட்ட சுனைனாவே மணமகன் குறித்த விளக்கமும் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in cinema news

To Top