எம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜுனாமா செய்ய வேண்டும் – புகழேந்தி பேட்டி

332

ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார்.

அமமுகவின் ஆதரவாளராக வலம் வந்தவர் பெங்களூர் புகழேந்தி. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை யார் சந்திக்க வேண்டும் என்றாலும் அது தினகரன் உட்பட அதற்கான ஏற்பாடுகளை செய்து தருபவர் அவர்தான். ஆனால், சமீபத்தில் அவருக்கும், தினகரனுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். எனவே, தினகரனுக்கு எதிராக தற்போது அவர் கருத்து கூறி வருகிறார்.

சமீபத்தில் கோவையில் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய புகழேந்தி ‘18 எம்.எல்.ஏ.க்களின் பதவி போக டிடிவி தினகரனே காரணம். தான் மட்டும் எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என அவர் கருதுகிறார்.சசிகலா விரைவில் வெளியே வருவார். அதுவரை அதிமுகவுக்கும், கட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டால் முதல் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம். இரட்டை இலை சின்னத்தை இழிவுபடுத்தி தினகரன் பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. எனவே, அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  நிறையே பேர் படித்திருப்பதால் வேலை கிடைக்கவில்லை - அமைச்சரின் சர்ச்சை பேச்சு