anirudh
anirudh

அனிரூத் கொடுக்க போகும் அதிர்ச்சி!….ஆறு மணி எப்ப தான் வரும்?…காத்திருக்கும் ரசிகர்கள்!…

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் அனிரூத். ரஜின முதல் கமல் வரை நிஜ வாழ்வில் வயதானதாக சொல்லப்படும் கால்களை கூட வைபாக மாற்றியவர் இவர். இவரது பாடல்களள் வெளிவந்தாலே அது 2கே கிட்ஸுல்க்கு கொண்டாட்டம் தான்.

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள “இந்தியன் – 2” படத்தின் இசையமைப்பாளர் இவர். ‘தாத்தா வராரு’ பாடலில் என்ன தான் விஷயம் இருக்கு என தெரியாமலேயே வாய்க்கு வந்ததை எல்லாம் விமர்சனமாக பேசி வருகிறது ஒருக்கூட்டம்.பாடலின் லிரிக்கல் வீடியோவை பார்த்து விட்டு தான் இந்த அலப்பறை செய்து வருகிறார்கள்.

 

ஷங்கர் என்றாலே டெக்னிக்கலி சவுன்ட் என்பதால் எந்த ஒரு சீனையும் கூட தனது படத்தில் தேவை இல்லாமல் வைக்கவே அனுமதித்திருக்காத ஷங்கரா அனிரூத்தை இப்படி இசையமைக்க விட்டு வேடிக்கை பார்த்திருப்பார்?. பாடலின் மெட்டினை அனிரூத் இப்படி போட ஷங்கர் ஏதாவது அழுத்தமான காரணத்தை சொல்லியிருப்பார் எனவும் இன்னொரு தரப்பு ஆதரவு அறிக்கையோடு சுற்றி வருகிறது.

anirudh
anirudh

எது எப்படி அமையும் எனபது படம் வெளி வந்த பிறகு தானே தெரிய வரும் என சொல்கிறது இன்னொரு குழு. இப்படி நிலைமை இருக்கையில் அனிரூத் போட்டுள்ள ஒரு ட்வீட் தமிழ் சினிமா ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. “சவுத் இந்தியாவ கலக்குறமாதிரி ஒரு கொலாப் நாளைக்கி’ என சொல்லியிருக்கிறார் அதில்.

இன்று மாலை ஆறு மணிக்கு அனிரூத் சொன்ன சஸ்பென்சுக்கு விடை கிடைத்து விடும் என சொல்லப்படுகிறது. அதனால் ஆறு மணி எப்போது ஆகும் என வாட்சை பார்த்துக்கொண்டே வலம் வந்து கொண்டிருக்கிறார்கல் அனிரூத்தின் ஃபேன்ஸ்.