Latest News
திருச்செந்தூர் கோவிலில் அலைகளில் சிக்கிய மூதாட்டி மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அழகிய கடற்கரை அருகே உள்ளது இந்த கடலில் குளித்து நீராடி விட்டுதான் முருகனை வணங்க செல்வர்.
இந்த கோவிலுக்கு வந்த மூதாட்டி ஒருவர் கடலில் குளிக்கும்போது கடல் அலைகளில் சிக்கிக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் மாரியம்மாள்.
அவர் உயிருக்கு போராடுவதை பார்த்த கடற்கரை பணியாளர்கள் உடனடியாக கடலில் நீந்தி சென்று மாரியம்மாளை பத்திரமாக மீட்டனர்.
