Tamil Flash News
ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு!…பின்னணி என்ன!..ஒர் அலசல்…
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். சந்திப்பின் போது தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான தமிழிசை செளந்தர்ராஜன் உடனிருந்தார்.
ஆளுநருடனான அண்ணாமலையின் இந்த திடீர் சந்திப்பு பின்னணி பற்றிய ஓர் அலசல். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் ஐம்பத்தி எட்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.
சந்திப்பின் போது கள்ளச்சாராய வழக்கு விசாரனையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதே கோரிக்கையை உள்துறை அமைச்சருக்கு ஏற்கனவே வைத்துள்ளார் அண்ணாமலை. ஆளும் திமுகவை சேர்ந்த பொறுப்பு அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பிருப்பதாகவும். இதானல் தற்போது சிபிசிஐடி வசம் இருந்து வரும் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாதிப்பிற்குள்ளானவர்களையும், அவர்களது உறவினர்களையும் நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் சொல்லியிந்தார்.
இதே போல மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜ்ய உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கள்ளக்குறிச்சியை நோக்கி படை எடுத்த வண்ணம் இருந்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பட்டும் வரப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை பன்னிரெண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.