ரஜினியால்தான் தமிழகத்திற்கு விமோசனம் – கஸ்தூரி ராஜா பேட்டி

333
kasthuri raja

அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினி அறிவித்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த ரஜினி இன்னும் தனது கட்சி பெயரை கூட அறிவிக்கவில்லை. அதோடு, தொடர்ந்து அவர் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். எனவே, அவர் மீது கடுமையான விமர்சனமும், கிண்டலும் எழுந்து வருகிறது.

அதேநேரம், பொங்கல் பண்டிகை நேரத்தில் மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அந்த மாநாட்டில் ரஜினி தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினியும் மாமனாருமான இயக்குனர் கஸ்துரி ராஜா ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அவர் கூறும்போது ‘தமிழகத்தில் ஒரு தலைவர் தேவைப்படுகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கே விமோசனம் கிடைக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  திமுகவினர் பேனர் வைத்தால் வரமாட்டேன் - மு.க.ஸ்டாலின் அதிரடி