Tamil Flash News
இன்னைக்கு கொஞ்சம் சூப்பரா இருக்குதாமே குற்றாலத்துல சீசன்!…அப்போ கிளம்பிற வேண்டியது தானா?…
மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை கேரளத்தில் காட்டிய தீவிரம் கூட இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்று மந்தமான நிலை இருந்து வந்தது குற்றாலத்தில்.
குளு குளு சூழல் மாறி வெயில் உக்கிரமானதால் மந்தமான நிலை இருந்தது, சாரல், காற்று இல்லாத போதிலும் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் விழுந்தது குளிக்க வந்தவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இன்று காலை பதினோறு மணி நிலவரப்படி நேற்றை விட இன்று சற்று முன்னேற்றம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
(இன்று காலை 11மணி நிலவரத்தின் படி எடுக்கப்பட்ட படம்)
வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் பெரிதாக சாரலும் , காற்றும் இல்லை. குளிர்ச்சியான சூழல் அதிமாக இல்லாத போதிலும் மந்தம் என சொல்லி விட முடியாத அளவிலே இன்றைய நிலை இருக்கிறது. அருவிகள் அனைத்திலும் தண்ணீர் அருமையாக கொட்டி வருகிறது.
இன்றும் நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அலை மோதும் என எதிர்பார்க்கபடுகிறது. இன்று இது வரை வரிசையில் நின்று காத்திருந்து குளிக்கும் அளவிற்கு கூட்டம் இல்லாத போதிலும் நேற்றை விட சற்று அதிகமாகவே இருந்தது.
இந்த வார துவக்கத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் மூன்று நாட்கள் அருவிகளில் குளிக்க அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வந்தது. நீர் வரத்து இயல்பான நிலைக்கு திரும்பியதுமே அருவிகளில் ஆனந்தமாக குளிக்க அனுமதிக்கப்பட்டடது.