Tamil Flash News
விஜய் கூட டிராவல் பண்ற அளவுக்கு அறிவில்லங்க…கமுக்கமா ஒதுங்கிய பாலா…தரமான சம்பவம் லோடிங்?…
விஜய் டிவி கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் ஹைலைட் காமெடியினாக இருந்த வருகிறார் பாலா. குக் வித் கோமாளியிலும் இவரது பெர்ஃபார்மென்ஸ் வேற லெவலாக இருந்தது. டைமிங் காமெடி, கலக்கும் கவுண்டர் என நிகழ்ச்சி பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகிறார்.
டிவியில் கிடைத்த பாப்புலாரிட்டி பாலாவை சினிமாவிற்கு கூட்டிசென்றது. தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் இவர். பேட்மிட்டன் விளையாட செல்லும் மைதானத்தில் வேலை செய்யும் 68 வயது வாட்ஸ்மேனுக்கு தனது சொந்த செலவில் புதிதாக வீடு கட்டிகொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணையப்போவதாக செய்தி பரவியது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாலா அரசியலுக்கு தேவையான அறிவு தனக்கு இல்லை. அதனால் விஜய் கட்சியில் இணையப்போவதில்லை என சொல்லியிருக்கிறார்.
தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்கு பிடிக்கும் விதமாக செலவளித்து வருகிறேன். நாலு பேருக்கு நல்லது செய்வது தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது எனவும் சொல்லி விஜய் கட்சியில் சேரப்போவதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
![vijay50](https://tamilnaduflashnews.com/wp-content/uploads/2024/06/vijay50.jpg)
vijay50
இதை பற்றி எல்லாம் விஜய் அண்ணாவின் தம்பிகள் கவலைப்படுவது போல தெரியவில்லை. வருகிற 22ம் தேதி பிறந்த நாள் கொண்டாடயிருக்கும் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமான ஸ்பெஷல் டிசைன் போஸ்டர் தயாராகி வருகிறது என்பது தான் இப்போ டிரெண்டிங்.
‘ஜூன் 20ம் தேதி மாலை ஆறு மனிக்கு ஸ்பெஷல் டிசைன் தளபதி-50’ என்ற பெயரோடு வந்துள்ள ஒரு போட்டோ வைரலாக பரவிவருகிறது சோஷியல் மீடியாக்களில்.