Latest News
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரம்-டீனுக்கு சம்பந்தமில்லை மாணவர்கள் விளக்கம்
மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாகவும் இதை டீன் ரத்தினவேலு கண்டு கொள்ளவில்லை என அவர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள மாணவர்கள் சங்க தலைவர் ஜோதீஷ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததை தான் அப்படியே வாசித்தோம் .
விழா ஏற்பாடுகள் அவசரமாக செய்யப்பட்டிருந்ததால் டீனுடைய கவனத்திற்கு இது செல்லவில்லை. 2019 முதல் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியபடியே வாசித்து வருகிறோம்.
இந்த விவகாரத்தில் டீனுக்கு சம்பந்தமில்லை என்ற ரீதியில் மாணவர் சங்கத்தலைவர் பேட்டியளித்துள்ளார்.
