மூன்று நாட்களாக என் கண்ணில் கண்ணீர்- பார்த்திபன் வேதனை

35

சமீபத்தில் நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள தனியார் லாட்ஜ் ஊழியர்கள் தீப்பந்தத்தை தூக்கி யானை மீது வீசியதில் யானையின் காது தீப்பிடித்து சீழ்பிடித்து உடல் நலம் குன்றி உயிரிழந்தது.

யானையின் தும்பிக்கையை கட்டிப்பிடித்துக்கொண்டு வன ஊழியர் பெள்ளன் என்பவர் கதறி அழுதது காண்போர் மனதை உருக்கியது.

இதை பார்த்திபனும் தனது டுவிட்டர் கருத்தில் கூறியுள்ளார்.

மனிதம் வளர்ப்போம், விலங்குகளிடமும்… மனிதம் மீது நம்பிக்கை இழந்த ஒரு தும்பிக்கை லாரியின் வெளிபுறம் துவண்டுக் கிடக்க,அதை அந்த வனத்துறை காவலர் இறுகப் பற்றி அழும் போது…. மூன்று நாட்களாக என் கண்ணீர் துளி…. யானை எடையில்!!!!! என பார்த்திபன் கூறியுள்ளார்.

பாருங்க:  கமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க