Entertainment
விழா மேடையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் எப்போதும் வித்தியாசமான ரசனைக்கு சொந்தக்காரர். அதிகம் கோபமாக இவரை பார்க்க முடியாது. வித்தியாசமாக பேசுவார் , வித்தியாசமான படங்களை இயக்குவார், வித்தியாசமான கவிதைகளை எழுதுவார்.
இப்படி பார்த்திபனின் வித்தியாச சிந்தனைகள் அதிகம். தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் சிங்கிள் டிராக் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது மேடையில் ஏ.ஆர் ரஹ்மானோடு பார்த்திபன் சிறிது நேரம் உரையாடினார் அப்போது மைக் லேசாக பேசுவதற்கு தடைபட்டது. உடனே கோபம் வந்தது பார்த்திபனுக்கு, டக்கென மைக்கை தூக்கி மேடையில் எறிந்தார் பார்த்திபன் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
