வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதித்த வனத்துறை

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதித்த வனத்துறை

கோவை மாவட்டத்தில் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் சிவன் கோவில் உள்ளது. சுயம்புவாக சிறு குகையில் இருக்கும் சிவனை காண பக்தர்கள் வருடம் தோறும் வெள்ளியங்கிரி மலை பயணம் மேற்கொள்வார்கள்.

வருடம் தோறும் ஏப்ரல் மே, இரண்டு மாதங்கள் தான் பக்தர்கள் மலை ஏறுவார்கள் . இந்த மாதத்தில்தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.

இந்த வருடம் மே 1ம் தேதி வெள்ளியங்கிரி மலை ஏற தடை என வனத்துறை அறிவித்தது. இதனால் மலையேற வந்திருந்த பக்தர்கள் கோபமடைந்தனர். வனத்துறையை எதிர்த்து சிலர் மலையேறினர்.

இருப்பினும் பக்தர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். இந்த வருடம் அதிக வெயில், மற்றும் வன விலங்குகள் இடம்பெயர்வதால் தற்காலிகமாக மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.