நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்!
கன்னட நடிகையாக திரைத்துறையில் க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா: தி ரைஸ், மிஷன் மஜ்னு போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறிய இவர் நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழில் சுல்தான் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது வித்யாசமான புது hair styleலில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.