Entertainment
முத்து மணிகள் கோர்த்த வெண்ணிற ஆடையில் ஆலியா பட் – Mummy ஆகியும் அழகு குறையல!
நடிகை ஆலியா பட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
விலையுர்ந்த ஆடம்பர ஆடைகளை அணிந்து வந்து பேஷன் ஷோவில் கலக்கும் நட்சத்திரங்கள் வரிசையில் இந்த ஆண்டு பாலிவுட் நடிகை ஆலியா பட் இணைந்துள்ளார். மெட் காலா 2023 நிகழ்ச்சி நேற்று நியூயார்க்கில் நடைபெற்றது.
இதில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒரு லட்சம் முத்துக்கள் பதித்த வெண்ணிற உடையில் தேவதைபோல் வலம் வந்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான அலியா பட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகு குறையாமல் அப்படியே இருக்கும் ஆலியா பட் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.