நெஞ்சுக்கு நீதியை பார்த்து பாராட்டிய முதல்வர்

நெஞ்சுக்கு நீதியை பார்த்து பாராட்டிய முதல்வர்

கனா படத்தை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆவார். கலக்க போவது யாருவில் பங்கேற்று அதன் மூலம் பெரிய புகழை பெறாவிட்டாலும் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடல் மூலம் அறியப்பட்டார்.

பிறகு கனா படத்தை இயக்கினார் . அந்த பட வெற்றிக்கு பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

தனது தாத்தா கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்ற நூலில் உள்ள டைட்டிலை உதயநிதி தேர்ந்தெடுத்துள்ளார். நெஞ்சுக்கு நீதி ஆர்ட்டிக்கள் 14 என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்து படக்குழுவை நேரில் பாராட்டினார்.