Entertainment
பெரும் வெற்றி கண்ட வருவான் வடிவேலனுக்கு வயது 44
கடந்த மே 19, 1978ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வருவான் வடிவேலன். இப்படத்தில் ஜெய்கணேஷ், முத்துராமன், ஜெய சித்ரா, படாபட் ஜெயலட்சுமி,, சந்திரகலா, பத்மபிரியா போன்றோர் நடித்திருந்தனர்.
எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்தன. இறையருள் இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். படத்தில் மொத்தம் 7பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனதுடன், படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது பக்திப்பட விரும்பிகள் அனைவருக்கும் இப்படம் ரொம்ப பிடித்தது என்றே சொல்லலாம்.
பெண்கள் , குழந்தைகள் அனைவரும் தியேட்டருக்கு சாரை சாரையாக சென்று இப்படத்தை பார்த்தனர் என்பது வரலாறு. சுப்பு புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது.
இப்படத்தின் சிறப்பு என்னவென்றால், மலேசியா, சிங்கப்பூரில் இருக்கும் முருக பக்தர்கள் எப்படி எல்லாம் விரதம் அனுஷ்டித்து முருகனை கொண்டாடுகிறார்கள் என்பதை காண்பித்ததோடு மட்டுமல்லாமல் அங்கு நடக்கும் தைப்பூச விழாவையும் அருமையாக காண்பித்திருப்பார்கள். குறிப்பாக மலேசியா பத்துமலை முருகன் கோவில் தைப்பூச விழாவை அருமையாக காண்பித்திருப்பார்கள். இணையம் இல்லாத காலத்தில் இது போன்ற விழாக்களை பிரமாண்டமாக காண்பித்தது இப்பட வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
