தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பிறகு எண்ணற்ற படங்களில் இவர் நடித்தாலும் ஹிந்தி திரையுலகம் பக்கம் கரை ஒதுங்கினார்.
ஹிந்தியில் பிரபல பெண் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு சபாஷ் மித்து என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் வயகாம் 18 என்ற ஸ்டுடியோசுடன் இணைந்து தக் தக் என்ற திரைப்படத்தை இவர் தயாரித்து நடிக்கிறார்.
மூன்று பெண்களை மையமாக கொண்ட கதையாக தக் தக் உருவாகி வருகிறது. இதில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங்கி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் நான்கு பெண்களும் பைக் மீது அமர்ந்து இருப்பது போஸ் கொடுத்துள்ளனர்.