தீரன் அதிகாரம் ஒன்று பெற்ற வெற்றியால் இயக்குனர் ஹெச்.வினோத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பார்க்கப்பட்ட ஹெச்.வினோத் அஜீத்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜீத் நடித்த திரைப்படம் வலிமை. அதே ஹெச் வினோத்துடன் இணைந்தார். இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் படம் நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த அளவு பேசப்படவில்லை.
இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்குகிறார். ஏ.கே 61 என்று மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்திற்கு பெயரிடப்படவில்லை.
இந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.