Latest News
மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு
கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குறைந்து வந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மட்டும் இதன் தாக்கம் குறையவில்லை. தினசரி பாதிப்பு 31,000 என்ற நிலையில் உள்ளது.
இதனிடையே கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி சிறிய தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் அடுத்த வாரம் மீண்டும் கொரோனா அங்கு அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
இதனால் வரும் ஞாயிறு முதல் முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.