Published
12 months agoon
பாலக்காடு அருகே மலம்புழா குரும்பாச்சி மலை இடுக்கில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த இளைஞன் பாறையின் நடுவில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்டார்.
இவரை மீட்க முடியாமல் ராணுவம் திணறியது மிகுந்த சிரமத்துக்கிடையில் இவர் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட பாபு அளித்துள்ள பேட்டியில் சிறிய குகையில் சிக்கி கொண்டதால் காலில் காயம் ஏற்பட்டது. இரவில் நல்ல குளிரும் பகலில் கடும் வெப்பமும் நிலவியது.
உணவு குடிநீர் இல்லாததால் உடல் சோர்வு ஏற்பட்டது
நான் இன்னும் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுவேன். எவரெஸ்ட் மலை ஏறவும் விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார்.