Latest News
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த 1 வருடத்துக்கும் மேலாக அதிகமாகவே உள்ளது. கடந்த ஆகஸ்டில் இருந்து கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஓமிக்ரான் வைரஸ் என்ற கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸ் பரவியதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது வைரஸின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்டதால் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கபட்ட கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு.
அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்
இறப்பு சம்பந்தமான விசயங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
பொது இடங்களில் முக கவசம், தனி மனித இடைவெளி தவிர்த்து முக்கிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.