Connect with us

வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்

Entertainment

வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்

மனிதனாக பிறந்தால் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் வட கொரியாவில் மட்டும் பிறக்க கூடாது என்ற அளவுக்கு அங்கு பல கொடூரங்களை நிகழ்த்தி வருபவர் அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

மிகவும் இளவயது அதிபரான கிம் ஜாங் உன்  தந்தை காலத்தில் இருந்தே சர்வாதிகாரம் தலை விரித்தாடுகிறது. தொட்டதெற்கெல்லாம் தண்டனை என வித்தியாசமான அதிபராக இருந்து வருகிறார்.

அடிக்கடி அணு ஆயுத சோதனை மேற்கொண்டு மற்ற நாட்டு அதிபர்களுக்கு கிலி கொடுத்து வருகிறார். தன் தந்தை  நினைவு நாளன்று நாட்டு மக்கள் யாரும் சிரிக்க கூடாது என உத்தரவு போட்டது, தனக்கு எதிராக செயல்பட்ட படைத்தளபதியை கொன்று அவரை நாய்க்கு போட்டது என இவரை பற்றி நம்ப முடியாத விசித்திர தகவல்களும் வந்திருக்கிறது.

இந்த நிலையில் வட கொரியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா யாருக்கும் வரவே இல்லையாம். தற்போது ஒருவருக்கு ஓமைக்ரான் உறுதியாகியுள்ளதால் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளாராம்

பாருங்க:  தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ரேபிட் டெஸ்ட் கிட்கள்! அதிரடி முடிவு!

More in Entertainment

To Top