Published
9 months agoon
உலகத்தில் உள்ள நாடுகளில் வட கொரியா ஒரு வித்தியாசமான நாடு. இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது. இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் 38 வயதான் கிம் ஜாங் உன்.
இவரது தந்தை காலத்தில் இருந்து பல வருடங்களாக சர்வாதிகார ஆட்சி மட்டுமே நடக்கிறது. இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அளவில் வட கொரியாவில் நிலைமை உள்ளது.
எதிரி நாட்டினர் யாருமே புக முடியாத அளவு வலுவான கட்டமைப்பை அதிபர் கிம் ஜாங் உன் ஏற்படுத்தி வைத்துள்ளார். யாரும் சிரிக்க கூடாது பேசக்கூடாது என கிம் ஜாங் உன் எல்லாவற்றுக்கும் சட்டம் போட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த நாட்டில் கொரோனா அலை வேகமாக பரவி பலரை காலி செய்து வருகிறது. கடுமையான சட்ட திட்டங்களால் கொரோனா பரவாமல் அதிபர் கிம் ஜாங் உன் வைத்திருந்தார்.
தற்போதைய திடீர் கொரோனா பரவலால் இந்த நாட்டில் இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க இராணுவ வீரர்களை மருந்து கொடுக்கவும், 24 மணி நேரமும் அங்குள்ள மருந்தகங்கள் திறந்து இருக்கவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா
கொரோனா காரணமாக 1 நாள் மட்டும் நடக்கும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா