Connect with us

கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு

Entertainment

கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா விதிமுறைகளை பலர் சரியாக கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முககவசம் உள்ளிட்ட அணிதல் உள்ளிட்டவைகளை சரியாக கடைபிடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  இதே போல கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், டிஜிசிஏ உறுதி செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் தங்கள் பயணம் முழுவதும், முககவசம் அணிந்திருக்கிறார்களா? என்பதை உறுதி செய்யவும், தங்கள் பயணம் முழுவது அவற்றை அணிந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சில விதிவிலக்கான சூழ்நிலைகளில், அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே முக கவசங்களை நீக்கலாம். விமானங்களில் பயணிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து நிறுவனங்கள் அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் டெல்லி கோர்ட் கூறியுள்ளது.

More in Entertainment

To Top